அது அப்படித்தான்
இப்படித்தான் இருக்க வேண்டும்
இது..
என்று போட்டுக் கொண்ட
வரையறைகள் ..
பின் அது ..
எப்படியெல்லாமோ
தெரிகிறபோது..
வருகிற ரௌத்திரம்..
அதற்குப் பிறகு வரும்
தெளிவு..
சுவாரசியத்தின்
துவக்கம்!..
வேற வழியில்லாத போது
இப்படியும் ..
நினைச்சுக்கலாம் இல்லையா..
இல்லை..
இப்படித்தான் நினைக்க வேண்டுமா?