மண்டப வாசலில்

அந்த திருமண மண்டபத்தின்
நுழை வாயிலில்..
மணமகன் ..மணமகள்..
படம் பெரிதாக..
வரவேற்க..
கீழே அமர்ந்திருந்த அந்த முதியவர்..
பெண் வீட்டாருக்கோ..
மாப்பிள்ளை வீட்டாருக்கோ..
தெரிந்தவர் இல்லை..
கையில் இருந்த காசையும்
பேருந்தில் தொலைத்து விட்டு..
ஊருக்குப் போக ..
என்ன வழி என்று
யோசிப்பவராக இருக்கலாம்..
கசங்கிய வேட்டியும்..
மூன்று நாள் சவரம் செய்யாத முகமும்..
யாரையும் தடுத்து நிறுத்தவே இல்லை..
குசல விசாரிப்புகள்..
சிரிப்பொலிகள் இடையே..
அவரை நெருங்கி..
"என்ன ஐயா..ஏதாவது தேவையா.."
என்று நாமாவது
கேட்கலாம் ..
வாருங்களேன்..
அது அவருக்கு
உதவியாகவும்..
அமையலாம்!

எழுதியவர் : கருணா (16-Sep-15, 11:17 am)
Tanglish : mandaba vasalil
பார்வை : 72

மேலே