கையில் ID இருக்கட்டும்

பையில் ஒரு நூறு ரூபாயுடன் அருகில் உள்ள கடைக்கு ஓரிரு பொருட்கள் வாங்கச் சென்றேன்...

திரும்பி வரும்பொழுது அந்த அதிக போக்குவரத்து இல்லாத வீதியில் வலதுபக்க ஓரமாக மெதுவாக (அதைவிட ஓரம் செல்ல இயலாது) நடந்து வருகையில், இடது பக்கம் மெல்ல சென்று கொண்டிருந்த ஒரு காரை மற்றோரு கார் வேகமாக முந்த, எனது இடது பாதத்துக்கு ஓரிழையில் உயிர் பிச்சை அளிக்கப்பட்டது.. வேகமாகச் சென்றவனை முறைத்துவிட்டு (வேறென்ன செய்ய முடியும்) மெல்ல எதிர் புரம் சென்று தெருவின் இடதுபுரத்தில் மெல்ல நடக்கத் துவங்கினேன்... அப்பொழுது தெருவின் வலப்புறம் ஒரு கார் wrong side-ல் செல்ல, மற்றொன்று அதன் இடப்புறமாக அதிவேகத்தில் முந்திச் சென்றது (wrong side overtaking). இம்முறை எனது வலது காலுக்கு நூலிழை அளவில் மீண்டும் பாப விமோசனம்.

இரண்டு முறையும் ஒரு அமைதியான பகுதியில் வாகன ஓட்டிகளின் அதீத வேகம், சாலை விதி மீறல்.

இதனால் சொல்ல வருவது என்னவென்றால், வெளியே செல்லும் பொழுது வெறும் ரூபாய் நோட்டுக்கள் மட்டும் கொண்டு செல்லாதீர்கள், உங்கள் ID யும் உடன் கொண்டு செல்லுங்கள்... அனாதை ஆவதையேனும் தவிர்க்கலாம்....

(வாகன ஓட்டுனர்களைத் திருத்த நான் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா...?)
---- முரளி

எழுதியவர் : முரளி (16-Sep-15, 7:20 pm)
சேர்த்தது : முரளி
பார்வை : 233

மேலே