காத்து அருள்வாய் கணபதியே
அகர முதல எழுத்துகளின்
முதல்வனே ! ஆதியே !
உமையம்மையின்
மைந்தனே ! சிவபெருமானின்
புதல்வனே ! ஆறுமுகத்தின்
தமையனே ! ஆணை முகத்துடன்
நிற்கும் ஆதவனே !
முக்திக்கும் பக்திக்கும்
மூத்தவனே ! முருகனுக்கு
மூத்தோனே ! ஞானப்பழம்
வென்ற ஞானியே !
எங்கள் வாழ்வின் நம்பிக்கை
உனது தும்பிக்கை ! எளியோனே !
கொழுக்கட்டை பிரியனே !
சித்தி விநாயகனே !
சித்தம் கலங்கி நிற்கும்
எங்களைக் காத்து அருள்வாயாக !!!!