உழைப்பின் அடையாளம்

தனது மகன்கள் ஆட்டம்போட்டு
விற்றுத்தீர்ந்த நிலம் போக,
தனக்கிருக்கும் சிறிய பங்கில்
பயிரைப் பயிரிட்டு
பகலில் மழை பொய்த்தாலும்
இரவில் மழை வருமென
தனக்குத்தானே
நம்பிக்கையோடு சொல்லி

காலை முதல் கருமை வரும் வரைக்கும்
புளித்துப்போன
பழைய கஞ்சியைக் குடித்துவிட்டு,

வயதான காலத்திலும் சளைக்காமல்
மற்றவர் பசி தீர்க்க
தான் பசியோடிருந்து,
கிராமத்தில் விவசாயம் செய்யும்
உழைப்பின்
ஒட்டுமொத்தஅடையாளம்
வி வ சா யி

(இடையில் எந்த முற்றுப்புள்ளி இல்லாமல் முதல் முயற்சியாக ஒரே வரியில் எழுதியது. இது கவிதையா அல்லது இது எண்ணமா என்பது தெரியவில்லை).

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (16-Sep-15, 10:53 pm)
Tanglish : ulaippin adaiyaalam
பார்வை : 1142

மேலே