அரிதாரமற்ற மனம்

சுடச்சுடச் சோறோடு மீன்குழம்பெனில்
வெளுத்துக்கட்டும் உள்ளம்...
அரிதாரம் பூசாதவொரு பொழுதில்
அக்குளக்கரையின் ஓரத்தில்
அமுதகீதமிசைக்கும் காற்றோடு
மெளனமொழி பேசுகையில்
துள்ளி வெளிப்படும் மீனை
அள்ளியெடுத்து நீருக்குள்
அலைய விட்டுவிட்டு அதன்
அசைவிலே லயித்திருக்கும்...!
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (16-Sep-15, 9:24 pm)
பார்வை : 325

மேலே