காதல் அடையாளம்
காதலின் மொழி
கவிதையாம்..
காதலின் அடையாளம்
கை ஜாடையாம்..
காதலின் கோபம்
அன்பின் அடைகலமாம்..
காதலின் பரிசு
நினைவு சின்னமாம்..
காதலின் சந்திப்பு
கடற்கரையாம்...
காதலின் உரசல்
காமத்தின் திறவு கோலாம்..
காதலின் முத்தம்
காமத்தின் அடித்தளமாம்..
காதலின் கசப்பு
கலந்துரையாடலில் கலக்கமாம்..
காதலின் பிரிவு அறியாமையில்
காதல் உதித்ததாலாம்..
காதலின் உண்மையான சிறப்பு
கல்யாணத்தில் முடிவதாலாம்..
காதல் வாழ்க உண்மை
காதல் மட்டும் அடையாளமாய் வாழ்க...