முதல் முத்தம்
தேன் குடிக்கச்சுற்றும்
எறும்புகளும்..
இதழ் அவிழ்க்க மறுக்கும்
அரும்புகளும்..
உன் வெட்கத்தை முன்னிறுத்த..
கூட்டத்திலிருந்து..
தனியே நழுவி நகரும்..
ஒற்றை விண்மீனோ..
உன் கோபத்தை நினைவூட்ட..
உன்னிடம்
கேட்பதா...
வேண்டாமா..
என அஞ்சி நிற்கிறேன்
ஒரு முத்தத்தை.!