நட்பென்னும் நிலை

அன்பையே நட்பாக நாம் நினைத்து பழகி வந்தோம்,
உள்ளத்தின் துடிப்புகளை உற்றார் யார் அறிவார்...?

கவலைகள் அறியாத கனிவான தோழமையில்,
மாற்றாரின் பழிச்சொல்லும் உணர்வரியா பார்வைகளும்,
தவறாக இருந்ததுவே நாம் பேசும் நேரத்தில்...

குற்றங்கள் எதுவுமின்றி நிறைவோடு நாம் வாழ,
நேசத்தின் நெருக்கத்தில் விழுந்தது கயவர்களின் கண்திருஷ்டி,
அறுந்தது நட்பென்னும் நேச மணி...

ஒருகணம் உனைப்பிரிய என் மனம் அழுதிடுமே,
மறுகணம் தேற்றிடுவேன் என் ஜீவன் நீதானே,
ஏன் அழுகிறாய் இதயமே...? என்று
மகிழ்வோடு மனம் குளிரும் உண்மை...! இதுவென்று...

உன்னோடு நான் வாழ்ந்த, காலங்கள் அதுபோதும்,
ஆறுதலாய் அதை நினைப்பேன் உன் நினைவு வரும்போது...

உடல்தான் உன்னை பிரிந்திருக்கும், உயிர் உன்னிலே கலந்திருக்கும்...
காலம் கடந்தாலும், துயரங்கள் சூழ்ந்தாலும், பணம் புகழ் சேர்ந்தாலும்,
உன் நினைவுகள் நீங்காது, உள்ளம் மறவாது, என் உயிர் உள்ளவரை என்னில் நீ......

எழுதியவர் : முகம்மது யாசீன். சே (18-Sep-15, 3:53 am)
பார்வை : 199

மேலே