உனை கண்ட பின் என் வாழ்க்கை
உனை காணும் முன்
***********************************
மழை இல்லாத
வானமாக
வண்ணம் இல்லாத
வான வில்லாக
வார்த்தை இல்லாத
காகிதமாக
பொருள் இல்லாத
இலக்கணமாக
கவிஞன் இல்லாத
கவிதையாக
பூக்கள் இல்லாத
செடிகளாக
இலைகள் இல்லாத
மரங்களாக
இறகுகள் இல்லாத
பறவையாக
நூல் இல்லாத
காற்றாடியாக
அலைகள் இல்லாத
கடலாக
மொழிகள் இல்லாத
காற்றின் அலைகளாக
பேசத் தெரியாத
குழந்தையாக
சூரியனின் வெளிச்சம்
இல்லாத பூமியாக
மேகத் துண்டுகள்
இல்லாத மேகமாக
எல்லைகள் இல்லாத
வானம் போல
மனதின் சோகங்களுடன்
வாழ்ந்து கொண்டு இருந்தேன் ....
உனை கண்ட பின்
****************************************
வழி இல்லாத
என் வாழ்க்கை பாதைகள்
வழிகள் உள்ள
பூ பாதைகளாக மாறின
என் விழிகளுக்கு ....
என் பாலை நிலமும்
நானிலமாக மாறின ....