புதிய கோடங்கி 50 வது கவிதை அந்தி மழை துவக்க இரவு

அந்தி மழையின் வாசம்
காற்றில் கலந்து
இளம் பெண்மையாக
கதவு இடுக்குகளின் வழி
உள் நுழைகிறது

வெளிா் நீல நிற அறையில்
மனதின் வேர்பிடித்துப் படபடக்கிறது
சாளரத்தின் திரைச்சீலைகள்

சுவா்ப் பல்லியின் நீண்ட நாக்கு
வறட்சி தீர இன்னும் நீள்கிறது
கொஞ்சம் எச்சில் வேண்டி

அறை சோ்ந்த மலர்கள்
பிறவிப்பலன் இதுவென்றே,
சேர்த்த மணம் அத்தணையும்
கொட்டித் தீர்க்கின்றன

கொய்த பழங்கள்
பால் குவளையின் மறைவில்
ஒளிந்து கொள்கின்றன

விளக்கு அணையும் போது
வெளிச்சத்தோடே போய்விடுகிறது
உதவிக்கு வந்த
எண்ணங்களும் கற்பனைகளும்

கையறுநிலையில் ,
இருளைக் கடந்தால் போதும் என
துவங்குகிறது இரு முயற்சிகள்...!

எழுதியவர் : புதிய கோடங்கி (18-Sep-15, 6:51 pm)
பார்வை : 109

மேலே