உறவுகள் - கற்குவேல் பா

உறவுகள்
````````````
பணத்திற்கு மட்டுமே
இந்தப் போலி உறவுகள்
முகம் மலருமெனில் ;
அதோ
அந்த தெருமுனையில்
தன் குழந்தையின்
கல்விக்காக - தன்
உடலை விற்கத்
தயாராக நிற்கும்
அந்த முப்பதுவயது தாயிடம்
நான் கொடுத்ததாக
இந்த ஆயிரம் ரூபாயை
கொடுத்துச் செல்லுங்கள் !
அவளேனும்
உண்மையான அன்புடன்
இன்றிரவு மட்டுமேனும் - என்னை
நினைத்துச் செல்லட்டும்
" சகோதரனாக " !

-- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (18-Sep-15, 5:21 pm)
பார்வை : 136

மேலே