ஒரு பேதையின் பிதற்றல்

ஒரு பேதையின் பிதற்றல்.
--------------------------------------------------
முத்தமிழின் சாறெடுத்து
முப்பாவிலே கலந்து
எப்போதும் சுவைத்திருக்க
தப்பின்றி என்மனமும்
பித்தாகி - மொத்தமுமாய்
தத்தை நான் எனை
இழந்து - நித்திரையின்றி
இத்தரையில் தவிக்கையிலே -
நனி சிறந்த கவிதைகளால்
பனித்தது என் உள்ளம்
அத்தனையும் என் மனதில்
பத்தியினால் ஒத்திடவே
வித்தைகள் பல புரிந்தே
சித்திரமாய் என் மனதில்
தித்திக்கப் பதிந்து விட்ட
ஆனந்த ஆசான் நாளும்
அழகு தமிழில் வான்
அமிழ்தொத்த நடையில்
அருவியெனக் கவி புனையும்
திறன் வியந்து மகிழ்ந்தே
என் சிந்தை மயங்குதே!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (19-Sep-15, 9:52 am)
பார்வை : 60

மேலே