அகத்தின்பம்
அகத்தின்பம்.
=====================
அன்றலரந்த மலர் ஓப்பும்
இதயங்களின் சங்கமத்தால்
உதயமாகும் எண்ணங்கள்
சதயம் எனவே ஒளிவீசுமே!
மண்ணில் தோன்றும் கனியும்
மணியும் சுவையும் விலையும்
மலிந்த பொருளே ஆனாலும்
மறுநாளேபழமை கொள்ளுமே;
மண்ணில் மறையும் உடலில்
தோன்றி ஊன்றி உணர்ந்து
போற்றும் புலனின்ப நுகர்ச்சியும்
போனாளில் தெவிட்டிப் போகுமே;
ஆருயிர் இரண்டது ஒன்றாகி
ஆர்த்து எழும் அகத்தின்பமோ
அன்றன்று புதுமை என்போம்!
என்றும் தெவிட்ட லுண்டோ!