அவளும் நானும் - ஆசிரியத்தாழிசை

என்கதவை மூடினேன் திங்கள் இரவு!
நினைத்தேன் நீஅப்ப டியில்லை! நம்உறவு!
இனிசந்திப் போமாயென் றயெண்ணம் குறைவு! 1

செவ்வாயில் தேடினேன் உனது வழித்தடம்
எங்கெல் லாமோ எல்லையில் பொதுயிடம்
உந்தன் எண்ணங்கள், இதயம், முகத்திடம்! 2

புதன்கிழமை நானும் சொல்லவில்லை யோசனை
உன்வாழ்வும் என்றும் நீங்காது என்னை
இருந்தாலும் நாமிருவர் இருப்போம் இணை! 3

வியாழன் மதியம் உன்னைமிக விரும்பினேன்
நாமொன்றாய் ஆர்வமுடன் வசிப்போமென்(று) உணர்ந்தேன்
என்ன ஆனாலும் தூரமில்லை என்பேன்! 4

வெள்ளிக் கிழமை வந்ததுமே சிலிர்ப்பு
துரத்தில் உன்வீட்டைப் பார்க்கையில் களிப்பு
என்றும் என்னவள் நீஎன்றே இயம்பு! 5

உன்னை நான்கண்டேன் நெஞ்சில் முழுதும்
சனிக்கிழமை கோயிலிலே உன்னைகண்ட பொழுதும்
எல்லாமே பெண்ணேநீ சிறப்பு எப்பொழுதும்! 6

கடலிலுள்ள சிறகிழந்த கடற்குருவி யாகவே
ஞாயிறிர வுயேங்கினேன்நான் உன்வரவுக் காகவே
நீயின்றி என்வாழ்க்கை எனக்குவீ ணாகவே! 7

ஆதாரம்:

சந்தமுடன் அமைந்த தாமஸ் ஹார்டியின் பாடல்

‘A week’ by Poet Thomas Hardy

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-15, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே