போர் குற்றமா -சந்தோஷ்

போர் குற்றமா ?
-----------------------------

ஆறாண்டுகள் கடந்துப்பின்பும்
இன்னும்
ஆறாத ரணம்
இன்னும்
தீராத துயரம்...
இன்னும் இன்னும்
முடியாத குற்ற விசாரணை.
இனியும்
முடித்துவிடக்கூடாத தோரணை.

2009 இல் ஈழத்தில் நடந்தது என்ன
போர்க்குற்றமா.. ?
கொத்து கொத்தாய்...
அப்பாவியாய்..
பீரங்கியிலும் தோட்டாவிலும்
மார்புகள் சிதைந்தும்
நெஞ்சுகள் பிளந்தும்
பிறப்பு உறுப்புக்கள்
சிதைக்கப்பட்டும்..
ஈழ மண்ணில்
சிதறிச் சிதறி
மாண்டவரெல்லாம்
போர் வீரர்களா ?

வயிறு கிழிக்கப்பட்டு
கர்ப்பபை தொப்புள்கொடியில்
சுற்றியவாறு மண்ணில்
பிணமாகிய இரத்தச் சிசுப்பிண்டங்களும்

கண்ணில் பயமேறி
’ எண்ட அப்பா ‘
என கதறியழத
பச்சிளங் குழந்தைகளும்
போர் வீரர்களா ?

சொல்லுங்கள் உலகநீதிபதிகளே
ஈழத்தில் நடந்தது என்ன ?
போரா... ?
இல்லை கொலையா ?

கண்ட காட்சிகள் இருக்கிறது
கொண்ட அலங்கோலங்கள் கிடக்கிறது
காட்டும் வீடியோ ஆதாரங்கள் குமறுகிறது
சாட்சிப்படும் ஆவணப்படங்கள். கொதிக்கிறது
இவை சொல்லுவதெல்லாம்
என்ன போரா..?
இல்லை இனப்படுகொலையா ?

சுட்டியாக திரிந்த
குட்டிப்புலிகளை கூட
கட்டிவைத்து
குறிப்பார்த்து
சுட்டுவிளையாடிய
காட்டுமிராண்டிகளின்
செயலுக்கு பெயர்
போரா.... ?
இல்லை கொலையா?

சிங்களத்து பூனைகள்.
செத்த புலியின் மீசை மசிரைப்
பிடுங்கி விளையாடிய செயலுக்குப்
பெயரென்ன.. ?
போரா.... ?

கரிக்கால புதல்வனாம்
புலிக்குட்டியின் மார்பில்
குண்டடி ஒட்டைகள்..
இசையான தேவதையை
நிர்வாணப்படுத்தி
கொடூரமாய் கொலைச்செய்த
கொலைகள்..

சொல்லுங்கள் இதன் பெயரென்ன
என்ன சர்வதேச நாட்டாமைநரிகளே..!
கொலையா.. போரா.. ?

யாரை எதிர்த்து
நடந்தய்யா போர்... ?
யாரை அழிக்க
முடிந்தய்யா போர்.. ?
எந்தக் கொடூரனை ஒழிக்க
தமிழர்களை கொன்றதய்யா போர்.. ?

சொல்லுங்கள் உலக நாடுகளே..!
சொல்லுங்கள் உலக நீதிகளே !

முதலில்
போர்க்குற்றமா...?
இல்லை
இது இனபபடுகொலை குற்றமா ?
என தெளிவுப்பெறுங்கள்.
பின்பு தானாக கிடைக்கும்
எண்ட ஈழத்தின் கண்ணீருக்கு
ஒரு நீதி... !

அட...
சர்வதேச மண்ணாங்கட்டிகளே
பன்னாட்டு பரதேசிகளே...
நீங்கள் யாருய்யா..
தீர்ப்பு எழுத...?

எங்கேனும் எங்களில்
ஒரு கரிக்காலன்..
எழுதிக்கொண்டிருப்பான்..
ஒரு நீதி.
இல்லையேல்
விரைந்து வந்து கொடுப்பான்
தக்க பதிலடி...!


**

இரா. சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார். (19-Sep-15, 2:39 pm)
பார்வை : 87

மேலே