அந்த சுகம்
தென்னைமரக் கீற்றுக்குள்ளே
பச்சை கிளிகள் பேசும் பேச்சு
கீற்றுக்களின் சலசலப்போடு
இசைந்து வரும் இனிய ராகமாக
காதுகளில் தேனாகப் பாய்ந்து வரும்
தேடி வரும் தென்றல் காற்றின்
மோகனமும் மெய் சிலிர்க்க வைத்து விடும்
அந்த முற்றத்து வெளியில்
நின்று நாம் வாங்கும் சுவாசக் காற்று
என்ன தூய்மை, என்ன ஆனந்தம் என்ன இன்பம்
கிராமத்தில் அனுபவித்த சுகம்
பட்டணத்தில் கிடைத்திடுமா/
இல்லை இல்லை அந்த அனுபவம்,
எல்லை இல்லா சந்தோசம் . அமைதி,
தேடுகின்றோம் இங்கே
பட்டணம் முழுவதும் சுற்றி திரிந்தாலும்
அனுபவிக்க இயலாது,
அந்த பச்சைப்பசேல் என்ற தோட்டம்
நெல் வயல்கள் வாழைமரங்கள்
கண்களுக்கு குளிர்ச்சி தரும் சோலைகள்
வேண்டியதெல்லாம் விரும்பியவாறு
கிடைத்திடும் சுகம் அல்லவா கிராம சுகம் ,
அந்த மன நிறைவு வேறு எந்த நாட்டிலும்
எந்தத் தேசத்திலும் அனுபவிக்க முடியாது
இன்று கிராமங்கள் முன்பு போலில்லை
கிராமம் படிப்பிலும் பண்பிலும் முன்னேறி
பலவகைகளிலும் ஏற்றம் அடைந்து வருகிறது
வளர்ந்து வரும் கிராமமாக
எம்மை வளர்த்து விட்ட கிராமம் ஆக
நாம் வாழ்ந்த கிராமம் எங்கே /
நாம் இங்கே அது அங்கே
"தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்கு காகம்"
இது தான் இன்று எங்கள் வாழ்கை
வானம் பாடித் திரிந்த நாங்கள்
வாழ்வில் ஒரு பிடிப்பு இன்றி வாழ்கின்றோம்
அந்த கிராமம் இந்த நகரம் இரண்டும்
பழக்கத்தில் இன்று பழகியாய் விட்டது
அதை நினைத்து இதை ரசித்து வாழ்கிறோம்