இதயப்பூக்கள்
இதயப்பூக்கள்!
--------------------------------
ஆருயிர் தோழியே!
வளர் நிதியே!
நிறைமதியே!
அனபுசகியே!
என்னருகில் நீ இருந்தால்
எல்லாமும் எனதாகுதே!
தீம்பால் நீ. நீஅளிக்கும்
தெம்பால் என் உயிர்
துடிப்பால் அதன்
படிப்பால் பெற்ற
பிடிப்பால் கொண்ட
களிப்பால் வடித்த பா!
உன்பால் நான் கொண்ட
அன்பால் மனம் கனிந்தே
ஆண்பால் பெண்பால் - எனும்
திகைப்பால் மலைப்பால்
அப்பால் நகர்ந்திடாது
இப்பாலே ஊர்ந்தவளே!
பால்மன நினைப்பால்
பாற்கடல் பரமனருளால்
என்பால் உன் கரம் நீண்ட
விருப்பால் இனிதேபூண்ட
நட்பால் மலர்ந்ததிடுதே
விழிப்பால் இதயப்பூக்கள்!