கால் நடை மேய்ப்பவனின் காதல்
தாமரை வாசவள் நாசியில் பூமணம்
வீசிட நானும் கண்டேன்
ஆதிரை மேனியில் ஆயிரம் தீபங்கள்
மேவிட நானும் நின்றேன்
மாநிற தோழியும் இதம் பெறவே
சாமரத் தோகையை வீசுகிறேன்
ஆநிரை மேய்பவன் அகமதிலே தாரகை
நுழைந்திட மயங்குகிறேன்.....