காதலி என் காதலி

காதலி என் காதலி
எனைக் காத்த முள் வேலி
எங்கு சென்றாய் எனை விட்டு
எனைக் காத்த முட்கள் உதிர்ந்ததோ?
இல்லை,
பூவாக வேறேங்கோ மலர்ந்ததோ?
தனியாக தவிக்கின்றேன்
எங்கு சென்றாய் எனை விட்டு...
வானையும் தூதுவிட்டேன்
காற்றையும் தூதுவிட்டேன்
உனை காணுமென்று தெரியவே
இதயம் துடிப்பிழந்து
கண்களின் இமை மூடிவிட்டேன்...
காதலி என் காதலி
எங்கு சென்றாய் எனை விட்டு...
கண்கள் இரண்டால்
என் நெஞ்சை பிழந்தாய்
உன் பெயர் சொல்லி
என்னை புலம்ப வைத்தாய்
ஒரு கால் கொண்ட ரோஜாவோ
உன் குழலில் ஆடுது
இரு கால் கொண்ட ரோஜாவாய்
நீ என் காதலோடு விளையாடுகிறாய்
பூமிக்குள் புதைந்தும்
என் ஜீவன் குமுறுகின்றதே...
காதலி என் காதலி
எங்கு சென்றாய் எனை விட்டு......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Sep-15, 1:02 pm)
Tanglish : kathali en kathali
பார்வை : 107

மேலே