காத்திரிக்கிறேன் என் முடிவை

வயற்றில் சுமந்து புறந்தள்ளிச்சென்றாய்
உன்னுழைப்பில் என் பசி தீர்த்தாய்
என்னுழைப்பில் உன் பசி தீர்க்க நீ இல்லாமல் போனாய்
பாசத்தை கோர்வை செய்து மாலையாக சூடினாய்
நீ இருக்கும்வரை என் வயதில் ஏற்றமில்லை
அம்மா என்ற பாசம் உணர்த்த யாரும் எனக்கில்லை
நீ என்னை பிரிந்ததும் உணர்ந்தேன் என் வயது முதிர்ந்ததை
எதுவுமே நிரந்தரமில்லை
நன்றி மறவேன் நீ எனக்கு செய்ததை
உன்னை சந்திக்க நானும் வருவேன்
உன் கரம் பிடித்து சாலை நெடுகே நடப்பேன்
என் குறும்புப் பேச்சால் உன்னை சிரிக்க வைப்பேன்
உனக்கீடு பாசம் நானும் தரவேண்டும்
உன் மடியில் உறங்கி சுவனப்பொழுதுகள் கழிக்க வேண்டும்
இறைவனிடம் கேட்டு அழுகின்றேன் உன் மடியை என் சுவனம் ஆக்கி கேட்டு
காத்திரிக்கிறேன் என் முடிவை
பூக்க இருக்கிறேன் உன் மடியில்
I LOVE YOU உம்மா...