இயற்க்கை வேளாண்மை

வேளாண்மையின் சிறப்பே
"இயற்க்கை வேளாண்மை"
இயற்க்கை உணவுகளைதருவது
"இயற்க்கை வேளாண்மை"!

அங்கக வேளாண்மை
ஆர்கானிக் வேளாண்மை
இயற்க்கை வேளாண்மை
இவைஅனைதுமே
"இயற்க்கை வேளாண்மை"

மனித பெருக்கம்
மக்கள் நெருக்கம்
உணவு உற்பத்தி
மிகுந்திடஅனங்கக வேளாண்மை!

உற்பத்தி மிகுந்தது - ஆனால்
மண்ணில் விஷம் மிகுந்துது!
உரங்கள் மிகுந்தடுது! - அதனால்
உணவும் மிகுந்தது!

புழு பூச்சிகள் மிகுந்தடுது! - ஆனால்
மண்புழு அழிந்துது!
உணவில் விசமும் மிகுந்தது! - அதனால்
உயிர்கள் அழிகின்றது!
இயற்கையை மறுப்பதால்
இன்னலும் பிறந்தது!

கலர்கலராய் கலப்பு உரங்கள்
விதவிதமாய் பூசிகொள்ளிகள்
அழிந்தது பூசிகளல்ல
அழிவது மனித இனங்கள்!

தழை சத்து மணி சத்து!
சம்பல் சத்து தந்திடும் கலப்பு உரங்கள்
உயிரை கக்கும் உயிர் உரங்கள்!
நன்ஜில்லா உணவை தந்திட
உயிர் உரங்கள்!

மண்ணை உரமாக்க
மட்கிய தழையை உரமாக்க
மண்ணில் வாழும் மண்புழுவும் உரமாக...
இதனை thavirpathal
மண்வாசனை மாறிபோச்சு!
மக்கள் இனமும் அழிஞ்சிபோச்சு!

ஏர் உழுத காலத்தில்
ஏற்றம் கண்ட நம்மக்கள்
ஆடு மாடு வளர்த்து பார்த்து
ஆடி மகிழ்ந்தனர் நம் மக்கள்!
ஆறு மாதம் விளைந்த நெல்லால்
ஆரோக்கியம் பெற்றனர் நம்மக்கள்
இயற்க்கை உணவை நாம் பெற்றிட
இயற்க்கை வேளாண்மை செய்திடலாம்!

அந்நியர்களின் வரவினலே
அழிந்தது நம் ஆரோக்கியம்
அந்நிய மோகம் இருப்பதினால்
அழிவதும் நம் ஆரோக்கியம்!
மாசுபட்ட உணவை உண்டால்
மடிவது நம் மக்கள்....
இயற்க்கை உணவை நாம் பெற்றிட
"இயற்க்கை வேளாண்மை seithiduvom!

மண்ணின் உரம் உயர்ந்திடவே
மண்புழு வளர்த்து பயன்பெறலாம்!
Nஞ்சில்லா உணவை தந்திடவே
பயன்படுத்துவோம் உயிர் உரங்கள்!
மாசில்லா மேலாண்மை - மக்களுக்கு
தேவைதான் "இயற்க்கை வேளாண்மை"!
இயற்க்கை தந்த பரிசாக
இருப்பது "இயற்க்கை வேளாண்மை"!

நீண்ட காலம் வாழ்ந்திடவே
நிறுத்திடுவோம் இரசாயன உரத்தினை
பாதுகாப்போம் மண் வளத்தை
பயன்படுத்துவோம் இயற்க்கை உரத்தை
மண்ணின் மனம் நாம் நுகர
மக்களினம் நாம் வளர்க்க
மறக்காமல் நாம் செய்வோம்
நஞ்சு இல்லா விவசாயத்தை!

மாட்டை வளர்த்து மண்ணை காப்போம்!
ஆட்டை வளர்த்து பண்ணை காப்போம்!
ஏர் உழுது பயிர் செய்வோம்!
ஏற்றம் கண்டு நாம் வாழ்வோம்!
பஞ்ச காவ்யம் தயாரித்து
பயிரின் வளர்ச்சி உறுதிசெய்வோம்!
அழ்ட காவ்யம் தயாரித்து
ஆரோக்கியத்தை பெற்று வாழ்வோம்!

எழுதியவர் : ரவி Shrinivasan (22-Sep-15, 2:03 pm)
பார்வை : 8070

மேலே