செல்பேசி

அன்று தொலைபேசி
இன்று செல்பேசி!
கையடக்க செல்பேசி
அனைவரிடமும் செல்பேசி!

கையிலஅடங்க கருவியுமில்லை
காது கேட்கா மனிதனுமில்லை
கம்பியல்லா நிலையிளது
கையடக்க செல்பேசி!

விந்தையிலும் விந்தையாக
விளையட்டாய் ஓர்கருவி
விஞ்ஞான வளர்ச்சியினால்
விளைந்தது செல்பேசி!

கடலில் சென்றாலும்
கனவில் மிதந்தாலும்
கையுடனே இருந்திடுமே
கையடக்க செல்பேசி!

ஒளியாக ... ஒலியாக...
ஓவியமாக... கட்சிபோருளாக
மின்காந்த ஒலியாக
உலா வந்திடும் செல்பேசி!

உன் நிழலைப்போல்
உன்னுடனே இருந்துவிடும்
உன் நண்பன் செல்பேசி
கையடக்க செல்பேசி!

எழுதியவர் : ரவி Shrinivasan (22-Sep-15, 2:17 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 218

மேலே