வலிகளை எரித்தவள் - நீ
வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் - நீ
நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் - நீ
உனக்கெனக்கொடுக்க
உண்மைக்காதலும் என்
உயிரும் மட்டுமே
உள்ளது என்னிடம் .....!
நீ எதுவும் தர முடிந்தால் ....
உள்ளத்தால் உண்மையான ...
காதலை தந்துவிடு ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
