விலகி செல்கிறேன்
......நீ என்னை
வெறுக்கிறாய் என்று
நான் விலகி செல்லலாம்
என்றால் உன் விழியால்
என்னை விழுங்கி
செல்கிறாய்.......
......ஒன்று செய்
முதலில் உன் விழிகளுக்கு
வெறுக்கும் வித்தையை
கற்றுக்கொடு......
.......பிறகு என்னை
உன் விருப்பம் போலே
வெறுத்து போ
நான் விலகி போகிறேன்.......