நீயே சொல்-ஆனந்தி

பறவை உதிர்த்த
ஒற்றை சிறகு நான்
எங்கு விழ - உன்
பாதடி தடத்திலா
அகன்ற பாதாளத்திலா......

உன் நினைவுகள் முழுவதும்
சிரிக்கிறது எனைக்கண்டு
என் நாட்கள் அத்தனையும்
நகர்கிறது எனைக்கொன்று....

என் கண்ணீர்த்துளிகளும்
மின்னுகிறதே உனக்காய்
சிந்துகையில்
அதும் உன் வசமோ......

அர்த்தமற்று விரிகிறது
என் இரவுகள்
அவசியமற்று கிடக்கிறது
என் கனவுகள்..........

உதிரம் கொதிக்கிறது
உடல் மெலிகிறது

ஆமையை போல்
நகர்கிறது நேரம்
ஆந்தையை போல்
அலறுகிறது.....மனது


இன்னும் எத்தனை நாள்
வாழ இந்த வெறுமையில்.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (23-Sep-15, 8:40 am)
Tanglish : neeye soll
பார்வை : 317

சிறந்த கவிதைகள்

மேலே