இரசம் பூசிய கண்ணாடிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
இரசம் பூசிய கண்ணாடிகள்!!!
இரயில் சினேகிதமும்,
அலுவலக உடன் ஊழியர்களும்,
நண்பர்களும், உறவுகளும்,
மிகையாய் இரசம் பூசிய கண்ணாடிகள்.
நீ சிரித்தாலும், அழுதாலும்,
நட்பு பாராட்டினாலும், பகைமை காட்டினாலும்,
துயரப்பட்டாலும், கோபப்பட்டாலும்,
விருந்துண்ண அழைத்தாலும், அழைக்காவிடினும்,
ஒட்டினலும், வெட்டினாலும்,
முன்னிறுத்தினாலும், ஒதுக்கினாலும்,
தொலைபேசியில் அழைத்தாலும்...
இன்னும் என்னவெல்லாம்
நாம் செய்வோமோ,
அதையே பன்மடங்காய்த்
திருப்பிக் கொடுக்கும்...
நமக்கும், சிலர் நம் பிள்ளைகளுக்கும் சேர்த்து!
தப்பு கண்ணாடியிலும் இல்லை,
இரசத்திலும் இல்லை,
பெரும்பாலும் உன்னிலிருக்கிறது.