மனைவி
உயிருரித்த உறவே!
என்னை காதலிக்கும் போது
வெகுளியாய் இருந்தாய்!..
மனைவியானதும் குழந்தையாய்
மாறிவிட்டாய்!..
ஆழி ஆர்ப்பரித்து மிச்சமிட்டதை,
கணினி கலங்கடிக்கும் காலத்தில்
ஆறாம் நூற்றாண்டின்
அரிவை நீயென்று,
வெறுக்கும் வழக்கம் கொண்டேன்.!..
நாகரீகத்தின் நகங்கள்
உன்னைத் தீண்டியதில்லை;
ஆடைகலாச்சாரங்கள் உன்னை
ஆர்ப்பரிக்கவில்லை;
வலைதளங்களில் சிக்கியதில்லை;
எள்ளி நகையாடியதில்லை;
சம உரிமைக்கு சண்டையிட்டதில்லை;
ஊடகங்களில் உட்புகவில்லை;
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
இயல்புகளில் ஒன்று கூட
உன்னிடம் இல்லை.!..
உண்மையில்,
இதுதான் உன்னை இன்னும்
காதலிக்க வைக்கிறது..!