என்னை தட்டி எழுப்புவது உன் கொலுசு ஒசைதானடி 555
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே...
கோவிலில் ஒலிக்கும் அந்த
மணியோசையைவிட ...
எப்போதும் எனக்கு
கிடைக்கும்...
உன் கொலுசு ஓசையே
எனக்கு பிடிக்கும்...
சம்பிரதாயங்கள் இல்லாத
சத்தம் அது...
மார்கழி மாதத்தில் கோவிலில்
ஒலிக்கும் சுப்ரபாதங்களைவிட...
உன் கொலுசு ஓசையே
என்னை தட்டி எழுப்புதடி...
ஓடிவருகிறேன் அந்த
பனியிலும்...
நீ போடும் மாகோலம்
ரசிப்பதற்காகவே...
நான் எழுந்ததும் தொழுவது
ஆலயமல்ல...
அழகே உன்னையும்
உன் மாகோலத்தையும்தான்.....