நடை பயிலும்

உற்சாகம் எழுந்து நிற்க சொல்லும்
உலக உருண்டை தளம் அமைக்கும்
பெற்றோர் கனவுகளின் பிரதி பலன்
ஒரு கால் ஊன்றி மறு கால் தூக்கும்
மாயமோ மாயோன் ஆசிர்வாதமோ
பூச்செண்டு நகர்ந்து மனம் வீசுமோ
பிள்ளை சிரிப்பில் எங்கள் உள்ளத்தை
ஆனந்த அவஸ்தையில் ஆழ்த்துமோ
எங்களின் பிறவி பயன் கண்டோம்
ஓரடி ஈரடி என்று ஒன்றொன்றாய்
பாதம் பதியும் இடங்களை முன்னின்று
கண்ணீரில் கழுவி மூச்சால் உலர்த்துவோம்