ninaithalae inikkum
தெவிட்டாத இன்பங்கள்
தெவிட்டிய தேடல்கள்
தேனூறும் சிந்தனைகள்
தித்திக்கின்ற அமுதங்கள்!
இனியொரு பிறப்பிலும்
இனிக்கின்ற நாதங்கள்
இவைதாம் எந்தன்
கல்லூரி கீதங்கள்!
என்னில் இழையோடும்
நெஞ்சில் நினைவூரும்
என் இனிய
கல்லூரிச் சாரல்கள்
கல்லூரித் தாயே
என் கற்பனை
எல்லவாவற்றிலும் நீயே
நேசிக்கவில்லை உன்னை!
சுவாசித்தேன்!
அதனால் தானோ?
என்னவோ
தினம் தினமன்றி
யுகம் யுகமாய்
வாழ்கிறேன்
இறந்தும் உன்
இனிய நினைவில்!
இப்படிக்கு,
கடந்து சென்ற
கல்லூரி மாணவர்களின்
கால்வழி தடங்கல்
காலத்தை வென்ற
காலடிச் சுவடுகள்
நினைத்தாலே இனிக்கும்
ஆம்!
நித்தம் நித்தம்
நின்னை
நினைத்தாலே இனிக்கும்