வித்தியாசம்

...............................................................................................................................................................................................

“ளுவுக்கும் னுவுக்கும் என்ன வித்தியாசம்? ”
கேட்டது மழலையர் பள்ளி ஆசிரியை..

அவ“னு”க்கு ஆசை
ஓட்டப் பந்தய வீரனாக..
வீட்டிற்குப் பிடிக்கவில்லை..
வாய்ப்பு மறுக்கப்படவில்லை..!

அவ“ளு”க்கு ஆசை
ஓட்டப் பந்தய வீராங்கனையாக..
வீட்டிற்குப் பிடிக்கவில்லை..
வாய்ப்பு வழங்கப் படவேயில்லை..!

இதயம் முணுமுணுத்துத் தணிந்தது..
“இதுதான் வித்தியாசம்...!”

எழுதியவர் : அருணை ஜெயசீலி (25-Sep-15, 6:48 pm)
பார்வை : 141

மேலே