பருவத்தில் நான்
கல்வி ரொம்பத்தான்
மாறிப்போனது
சின்னஞ்சிறு வயது
களியாட்டங்கள்
எல்லாம்
காணாது போனது.
வீட்டிலும் வெளியிலும்
விதம் விதமாய்
சலிக்காத
விளையாட்டுக்கள்
வாழ்வினில்
முதன் முதலாய்
ஸ்பரிசப்படும்
அழகு துகள்கள்..
கொட்டாங்குச்சி
கொடிக்காப்புள்ளி
கொல கொலையா முந்திரிக்க
கண்ணாமூச்சி ரே ரே
ஐஸ் (திருடன் போலீஸ்)
கொத்துக்கல்
பல்லாங்குழி
உம்மிக்காசு
ஒவ்வொன்னும்
ஊரெல்லாம் கொண்டாடும்
ஒவ்வொரு சீசன்!
இன்றும் நான் அதே ஞாபகத்தில்...
இதோ,
மழை
நாளில்
சிறகடிக்கும்
ஒரு தும்பியை...
மெத்தென்ற
சிவப்பு வெல்வெட்டு
பூச்சியை......
பனைஓலைக்
காற்றாடியை
பழைய பேப்பர்
பட்டத்தை........
தொட்டாற்
சுருங்கும்
சிணுங்கியை......
அரைக்கால்
சட்டையணிந்த
பருவத்தில் நான்
கண்டு ரசித்ததையெல்லாம்...
இளையமகளுக்கு
கூகிளில் காட்டி மகிழ்ந்தேன்!