மோதல்

அதோ ! தூரத்தில் என் எதிரி

அவனேதான்....விடமாட்டேன் இன்று

இன்றோடு அவன் கதை முடிந்தது

பதுங்கிப் பதுங்கி நகர ஆரம்பித்தேன்

யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்

எனது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக

அதிகரித்து வேகமாக போகின்றேன்

என்ன இறுமாப்பாக நிற்கிறான் அவன்

இதோ.. ..நெருங்கிவிட்டேன்

இன்றோடு தொலைந்தான் என் எதிரி


வேகத்தை பல மடங்காக கூட்டிக் கொண்டு

இதோ அவனை அடித்து நொறுக்கப் போகிறேன்

பலம் கொண்ட மட்டும் மோதுகிறேன்

எங்கே இன்றும் நான் தோற்றுப் போனேன்

சிறுசிறு துளிகளாய் சிதறிப் போனேன்,

தினம் தினம் தடை போடும்

அந்த கரையோர கரும் பாறையை

மோதிய கடல் அலையாகிய நான்

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (25-Sep-15, 7:09 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : mothal
பார்வை : 88

மேலே