சென்ரியு

குழந்தையின் பிடிவாதக் குணத்தை
மாற்றி விடவேண்டுமென்பதில்
பிடிவாதமாக இருக்கிறார்கள் பெற்றோர்.

கைராசியான மருத்துவர்.
சிகிச்சைப்பணம் வாங்கும்போது
கைராசி பார்ப்பதில்லை

ஆற்றைக் காணவில்லை
தேடினார்கள்
மணல் கொள்ளைக்காரர்கள்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Sep-15, 2:01 am)
Tanglish : senriyu
பார்வை : 155

மேலே