தொடர்பெல்லை

விரலிடுக்கில்
உலகம் பற்றிய அறிவு?
ஓரளவு...

விரல் சொடுக்கில்
விளைந்திடும்
வெற்றி தருணங்கள்?
ஏதோ கொஞ்சம்...

விரல் முனையில்
உலகம்
தொடர்பெல்லைக்கு
வெளியே உறவுகள்.

இன்னுமா, இன்னுமே ?

எழுதியவர் : செல்வமணி (26-Sep-15, 9:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

மேலே