தனிமை

தூரத்திலிருந்து வெளிச்சக்கீற்று
வழிகாட்ட - மெல்ல மெல்ல
செல்கிறது என் பயணம்..
சில்வண்டுகளின் கூக்குரலில்
என் வார்த்தைகள் மௌனமாயின..
இருள்சூழ்ந்த காடுகளின்
சலனமற்ற அமைதி
மெல்ல என்னை அசைத்துப்பார்க்க
தடம்மாறது அனிச்சையாக
நடைபோடுகிறேன்..
தனிமைக்காடு தாண்டி
வெளிவரும் பயணத்தில்
மெல்லப்பெருகிவரும்
ஒளிப்பிரவாகத்தில்
திரும்பிப்பார்க்க - என்
நிழலும் இல்லாது போனது...

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (23-Sep-15, 12:35 pm)
சேர்த்தது : நீ சங்கர்
Tanglish : thanimai
பார்வை : 837

மேலே