நம்பிக்கை
என் உயிரே என்றேன் ...
எட்டி உதைத்தாய் ..
தேவதையே என்றேன் ..
தேடி வந்தவனை நோகடித்தாய் ...
கடிக்கரும்பே என்றேன் ....
வார்த்தைகளால் கடித்துக் குதறினாய் ...
உலக அழகி நீதான் என்றேன் ....
உதாசீனப்படுதினாய் ....
நெஞ்சத்தில் நேசம் வளர்த்து
நெஞ்சுருகி காதலை யாசித்து நின்றேன் ...
காவியமாய் ஒரு கடிதம் எழுதி
உன் காலடியில் சமர்பித்தேன் ...
கிழித்து கசக்கிப் போட்டாய் ...
கஜினி முகமதுவாய் நான் ...
படையெடுத்துக்கொண்டே இருக்கிறேன் ...
என்றாவது ஒருநாள் என்னிடம் தோற்று
நீ சரணடைவாய் என்றே சாகிறேன் நித்தமும் ..