லிப்ட்
லிப்ட்....
( இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிட்டோ , யார்மனதையும் புண் படுத்தவோ எழுதப் படவில்லை )
அந்த பெண் மிகவும் சோகமாக இருந்தால், அவனைப் பற்றி செய்தி வெளியிட்ட அனைத்து சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்தால். இந்த சம்பவம் பற்றி எந்த தகவலும் வரவில்லை, இணைய தளத்திலும் தேடி பார்த்தாள், அன்றைய தினம் வெளியிட்ட அதே செய்தி அப்படியே இருந்தது,
அவளில் கடைசி நம்பிக்கை முகநூல் ;
அவள் போட்ட பதிவிற்கு பதினேழு லைக்குகள், நான்கு கமாண்டுகள், முப்பத்து மூன்று பகிவுகள் மட்டும் இருந்தது.
இந்த உலகத்தில் மிகக் கொடுமையான விடயங்களில் ஒன்று தவறே செய்யாமல் தண்டனை அனுபவிப்பது. குற்றம் செய்யாதவன் மீது குற்றம் சுமத்தி அவனை சித்திரவதை செய்வது.
இன்று நாமெல்லாம் தொழில் நுட்பங்களின் தத்துப் பில்லையாகிவிட்டோம். நாம் என்னதான் பக்கத்து வீட்டுக் காரனுக்கு மாய்ந்து மாய்ந்து உதவி செய்தாலும், விழா காலங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினாலும் ஆபத்து காலங்களில் நள்ளிரவானாலும் மருத்துமனைக்கு ஓடோடி சென்று உதவி செய்தாலும் ,
ஒரு WIFI கனெக்சன் கொடுக்க நம்மை நம்புவதில்லை அந்த பக்கத்து வீட்டு மனிதர்கள். சிதம்பர இரகசியம் போல அதற்கான கடவு சொல்லை பாதுகாத்து வருவார்கள். கடவு சொல் கை பேசியில் போட்டு கொடுத்தாலும் ஒளிவும் மறைவுமாக செய்யும் போது செறுப்பால் அடித்தது போல இருக்கும்.
சக மனிதன் மேல் நம்பிக்கை இல்லாமல் போனதை நினைக்கும் போது உண்மையிலேயே கேவலமாக இருக்கிறது.
அவர்கள் மேல் குற்றம் சொல்லுவதும் முறை இல்லை , ஏனெனில் பலர் பலரின் நம்பிக்கையை காப்பாற்றுவதே இல்லை. யாரை எப்படி ஏமாற்றவது என்பதை பல பேர் பகுதி நேர வேலையாக செய்து வருகிறார்கள்.
நம் கதையின் நாயகன், எல்லா கதை நாயகர்களைப் போல இவனும் கொஞ்சம் வித்தியாசமானவன்தான். ரெட் திரைப்பட அஜித் போல ஒட்ட வெட்டிய தலை மயிர், மாநிறம், முகத்தில் கொஞ்சம் லேசாக எண்ணெய் வடியும். கீக் கிளாஸ் அணிந்திருப்பான். வயது இருபத்தி நான்கு இருக்கலாம்.
ஆனால் உடை அணிவதில் அவனை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. விளம்பர மாடல் ஆண்களைப் போல உடை அணிவான், எல்லாமே பிராண்டட் தான். ஆனால் அவன் ரொம்பவே காமெடி பீஸ், அவனிருக்கும் இடமெல்லாம் கல கலப்புதான். யார் மனதை நோகடிக்கக் கூடாது என்று அவனுக்கு சிறு வயது முதலே சொல்லித் தரப் பட்டிருக்கிறது.
பிறரிடத்தில் பேசும் போதும், பழகும் போதும் கவனமாக இருப்பான். அவனை குறை சொல்கிறவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
" குறை இல்லாத மனிதனும் இல்லை,
குறை சொல்லாத மனிதனும் இல்லை"
இருபதிற்கும் மேற்பட்ட கார்பொரேட் கம்பனிகள் அமைந்திருக்கும் அந்த கட்டிடத்தில்தான் அவன் வேலை செய்யும் அலுவலகமும் உள்ளது.
அன்று ஏனோ அவன் வழக்கைத்தை விட உற்சாகமாகவும் , சந்தோசமாகவும் அலுவலகம் புறப்பட்டு வந்தான். அன்று காலை மிகவும் பனி மூட்டமாக இருந்தது, அந்த பனி மூட்டத்தின் காரணமாக அவன் வேலை செய்யும் அந்த வளாகத்திற்கு முன்பாக ஒரு விபத்து உயிரிழப்பு ஒன்றுமில்லை என்றாலும் வாகனம் ஒன்று தீப் பிடித்து முற்றிலுமாக சிதைந்து போனது. அதனை சில செய்தியாளர்கள் படம் பிடித்திக் கொண்டிருப்பதை கவனித்த வண்ணம், வளாகத்தினுள் சென்று, மூடப் போகும் லிப்ட்டின் கதவை வேகமாக நிறுத்தி உள் புகுந்தான் அவன்.
லிப்ட் ஹவுஸ் புல்லாக இருந்தது, ஒரு மூலையில் அவன் , அவனுக்கு அருகில் ஒரு இளம் பெண், அடிக்கடி முடியை அவள் கோதிக் கொளவதைப் பார்த்தால் இன்னும் திருமணமாகவில்லை என்றுதான் தோன்றுகிறது.
லிப்ட் மெதுவாக வேகம் குறைந்து டக்கென ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு பாதியிலேயே நின்றது. லிப்டின் விளக்கு கண்களை மூடிக் கொண்டது, உள்ளே ஒருவர் கட்டி இருந்த ரேடியம் கை கடிகாரத்தின் பச்சை, இதை தவிர அங்கு ஒன்றுமே புலப் படவில்லை,
எல்லோரும் அவர் அவர்களது கைபேசியை எடுத்து டார்ச்சை அடிக்கும் முன்பு அந்த சில நொடிகளில் பளார் , என ஒரு சத்தம் கேட்டது. அந்த சத்தம் கதையின் நாயகனுக்கு அருகில் இருந்த பெண் அவனை அறைந்ததால் வந்த சத்தம், லிப்ட் அதிர்ந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது, விளக்கும் வந்தது, நாயகனை அவள் மீண்டும் மீண்டும் அரைந்தால் வேகமாக, அவன் கூனிக் குறுகி லிப்டின் உள்ளேயே குந்தி உட்கார்ந்தான்.
என்ன ஆனது என எல்லோரும் அதிர்ந்து கேட்க,
இவன் என்னை தவறான இடத்தில் தொட்டு விட்டான் என்று சொல்லவும், லிப்டில் இருந்த அனைவரும் அவன் மீது மிக பயங்கரமாக தாக்குதல் நடத்தினார்கள், அவன் கிழே குந்தி இருப்பதால் அடி மிகவும் அதிகமாக விழுந்தது.
லிப்டை கீழே இறக்கி, அவனை தர தர வென இழுத்து வந்து வளாகத்தின் வெளியே போட்டார்கள். அங்கும் சிலர் அவனை அடிக்க , அவன் துடித்து கதறினான். அந்த பெண் உடனே காவல் துறைக்கு போன் செய்து அவன் மீது புகர் கொடுத்தாள். விபத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் இந்த இந்த சம்பவத்தையும் படம் பிடித்தார்கள், அவன் அடி வாங்கியதால் மயக்கமுற்று கிடந்தான், இந்த பெண் செய்தியாளர்களை பார்த்ததும் பயன் படுத்தாமல் பையில் வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து தன முகத்தை மூடிக் கொண்டாள்.
சில மணி நேரம் கழித்து, கண் விழித்தான் அவன்
அவனால் கண்களை திறக்க முடியவில்லை, கண்கள் வீங்கிப் போய் லேசாக கண்ணீருக்குப் பதிலாக இரத்தம் கொட்டியது, மெதுவாக கண்களை திறந்து பார்த்தான்,
சிறையின் உள் கிடப்பதை உணர்ந்தான், அவனால் தலையை தூக்கி கூட பார்க்க முடியவில்லை, வாயிலிருந்து வடியும் எச்சிலில் அவன் முகம் கிடந்தது, அவன் சிறைக் கம்பிகளை தாண்டி அவன் பார்வை வெளியே சென்றது.
ஒரு காவல் மேல் அதிகாரியிடம் அவனை அடித்த பெண் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
" சார் அவன் மீது எப் ஐ ஆர் பதிவு செய்து அவனை உள்ளே தள்ளுங்கள் , நான் எவ்வளவு நேரமாக கத்திக் கொண்டு இருக்கிறேன் கொஞ்சம் கூட மதிப்பு இல்லை "
அந்த காவல் அதிகாரி ஒன்றுமே பேசாமல் லேசான புன் முறுவல் செய்தார். அவரின் அந்த புன்னகை சூடானா தவாவில் நல்லெண்ணெய் ஊற்றியதைப் போல இருந்தது அந்த பெண்ணுக்கு.
மீண்டும் அந்த பெண்ணே தொடர்ந்தாள்
" அவ்வளவுதான் இந்த நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது, கற்பழித்து கொலை செய்தாலும் இந்த போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது போல"
என்றவாறு தலையில் அடித்துக் கொண்டாள்.
சில நிமிடம் அமைதி நிலவியது,
இப்போது அந்த காவல் துறை அதிகாரி பேசினார் ;
எதக்கு அந்த பையனை இரக்கமே இல்லாமல் அடித்தீர்கள் ?
" அவனை அடிக்காமல் என்ன செய்வது " ? என்றாள்
அவன்தான் உன்மேல் கை வைத்தான் என்று என்ன ஆதாரம் ? வேறு யாராவது அதனை செய்திருக்கலாம் அல்லவா ?
அவள் ஒன்றுமே பேச வில்லை, அதை ஏன் நான் யோசிக்கவே இல்லை ? என்ற கேள்வியை அவள் ஆழ் மனதிர்க்குல்ல்யே எழுப்பிக் கொணாடால் தலையில் கை வைத்த வண்ணம் அமைதியாக இருந்தாள் அந்த பெண்.
உண்மையிலே இதோ அடிவாங்கிய பைய்யன் கட்டி இருந்த வாட்ச் , இதுல ரேடியம் இல்ல. பார்த்துக்கொள் என்றவாறு அவளுக்கு எதிரே கோபத்துடன் தூக்கிப் போட்டார் அந்த போலிஸ்.
இந்த வீடியோவைப் பார் என்று, அவரின் மேஜையில் இருந்த கணினியின் திரையை அவள் பக்கம் திருப்பினார். விளக்கு அணைந்த நேரம் லிப்டில் நடந்தவை அனைத்தையும் லிப்டினுள் இருந்த இரகசியக் கேமரா பதிவு செய்திருந்தது.
அந்த கானொளியில் அந்த பெண் இருந்த பக்கம் , ஒரே ஒரு ரேடியம் கொண்ட கை கடிகாரம் மட்டும் வேகமாக போய்விட்டு வருகிறது. அதன் பிறகு அவனை அடித்தது என தொடர்ச்சியான அனைத்து காட்சிகளையும் அவள் பார்த்தாள்.
அவள் முகம் சிவந்து போனது, அங்கேயே அவளுக்கு அழ வேண்டும் போல இருந்தது. அவள் அழுகையை அடக்கிக் கொண்டாள்.
உன் மேல் கை வைத்தது அடி வாங்கிய அந்த பைய்யன் இல்லை, பார்சல் டெலிவரி பண்ண வந்த பைய்யன் அதாவது நாயகனுக்கு அருகில் நின்ற வேறு ஒரு மூதேவி . இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனை கைது செய்துவிடுவோம்.
இப்போ இவனுக்கு என்ன செய்வது ? எல்லா செய்த்தித் தாளும் இவனோட போட்டோவோட நியூஸ் போட்டாங்க, பேஸ் புக்குல இந்த செய்தி தீயா பரவிவிட்டது. இவனோட எதிர் காலம் உன்னால கேள்விக் குறியா ஆகிவிட்டது.
இந்த பையனைப் பற்றியும் விசாரித்தோம், இவவைப் பற்றி ஒரு நெகட்டிவ் கமாண்டும் வரவே இல்லை.
இவனை கெட்டவன் என உலகம் முழுக்க இரண்டு மணி நேரத்துக்குள் கொண்டு சேர்த்து விட்டாய், முக நூலில் மட்டும் ஏழாயிரம் பகிர்வு ஆகி இருக்கிறது. இந்த செய்தியாளர்களிடம் போய் இவன் நல்லவன் இவன் தவறே செய்யவில்லை , என சொனால் அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா ?
இந்த மாடர்ன் சமூகம் குற்றவாளிகளை வளர்த்தெடுக்க தன் முனைப்போட செயல் படுமளவிற்கு ஒரு நல்லவனை உருவாக்க முயற்சி செய்யிறது இல்ல.
ஒண்ணுமில்லை ஒன்னோட முக நூல் கணக்கிலிருந்து நடந்த சம்பத்தை விளக்காமாக ஒரு பதிவு போடு என்றார், அவளும் வேகமாக டைப் செய்து ஒரு பதிவு போட்டாள். உடனே அவனைப் பற்றி செய்தி வெளியிட்ட அனைத்து ஊடங்கங்களுக்கும் தகவலை தெரிவித்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு....
அந்த பெண் மிகவும் சோகமாக இருந்தால், அவனைப் பற்றி செய்தி வெளியிட்ட அனைத்து சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்தால். இந்த சம்பவம் பற்றி எந்த தகவலும் வரவில்லை, இணைய தளத்திலும் தேடி பார்த்தாள், அன்றைய தினம் வெளியிட்ட அதே செய்தி அப்படியே இருந்தது,
அவளில் கடைசி நம்பிக்கை முகநூல் ;
அவள் போட்ட பதிவிற்கு பதினேழு லைக்குகள், நான்கு கமாண்டுகள், முப்பத்து மூன்று பகிவுகள் மட்டும் இருந்தது.
மனிதன் தான் செய்த தவறுக்கு நல்ல நீதிபதியாகவும்
மற்றவர் செய்த தவறுக்கு நல்ல வக்கீலாகவும் இருக்கிறான்
என்று எங்கோ படித்ததாக நினைவு.
ஆக்கம் & எழுத்து : தமிழ் ஹாஜா