விதவை திருமணம்

முகூர்த்தம் வைத்து
முகர்ந்து பார்த்தவன்
முக்தி எய்திட-இந்த
முல்லைப்பூ - வெறும்
வெள்ளைப்பூ ஆகுதல்
முறையெனில்-
இவளது
வெண்ணிற சேலைக்கு
வண்ணங்கொடுத்து-
மீண்டு(ம்) வாழும்
எண்ணங்கொடுத்து-இவள்
உடல் பசிக்கும்
உணர்வுப்பசிக்கும்
அன்னங்கொடுப்பவன்-நிஜ
ஆண்மகன் என்பதும்
முறையே!!