நூல்கண்டு

................................................................................................................................................................................................

அம்மா கையில் நூல்கண்டு..
அழகான சணல் கண்டு;

தட்டி விட்டது கரும்பூனை..
தாவித் தொடர்ந்தது நூல்கண்டை..!

உருண்டது உருண்டது சணல்கண்டு
ஓடுது ஓடுது கரும்பூனை..

தோட்டத்தில் நுழையுது சணல்கண்டு
தொடர்ந்தே ஓடுது கரும்பூனை..!

நூலிழை மட்டும் தெரிகிறதே..
நூல்கண்டு முற்றாய்ப் போனதெங்கே?

............................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Sep-15, 12:47 pm)
பார்வை : 124

மேலே