ஒருதலை காதல்

யாருமற்ற இடத்தில்
அவள் பாதம் பட்ட தடத்தில்
என் பாதம் வைத்து ரசித்தேன்
எனக்குள் சிலிர்த்தேன் சிவந்தேன்...

அவள் கண்கள் என்னை பார்த்ததில்லை
அவள் கண்கள் காணாமல் நான் இருந்ததில்லை...

அவள் கால்கள் என்னை நோக்கி நகர்ந்ததில்லை
எண்திசை அவளாக இருப்பதை அவள் அறியவில்லை...

அவள் வெட்கம் உணர்ந்ததில்லை
அவள் பேச என்னிடம் வந்ததில்லை
அவளின்றி என் ஆசை அடங்கவில்லை...

அவள் வீட்டுப்பாதை தொடர்ந்தேன்
என் வீட்டுப் பாதை தூரமானது
அவள் பின்னழகு மனனமானது ...

என் பெயர் அவள் அறியவில்லை
அவள் பெயர் கூற நான் மறந்ததில்லை...

அவள் வந்த பின் அவளாக நான் உணர்ந்தேன்
அவளால் நானும் கவிஞ்சனாய் ஆனேன்...

தேகம் சூடேறும் தேனிலவு பதுமையவள்
தேயாத வெண்ணிலா வெளிச்சச்சமவள்

காதல் கவி கொண்டு சென்று அழைத்தேன்
கண்ணீர் மட்டும் மீதம் ஆனது எனக்கு...

அவள் காதல் என்றோ யாருக்கோ பங்கு போயிற்று
என் காதல் ஒருதலை காதல் ஆயிற்று...

எழுதியவர் : பர்ஷான் (28-Sep-15, 6:14 pm)
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 264

மேலே