உணவே மருந்து ருசிப்போம் உணர்ந்து

உணவே மருந்து... ருசிப்போம் உணர்ந்து...

அவசரம் அவசரம் அவசரம்
====எதிலும் இங்கே அவசரம்
அவசரம் அவசரம் அவசரம்
====உணவிலும் ஏனோ அவசரம்
அவசியம் அவசியம் அவசியம்
====நல்ல உணவுகள் அவசியம்
அவசியம் அவசியம் அவசியம்
====சீக்கிரம் உணர்தல் அவசியம்

அதிக கலோரி
==அதிக கொழுப்பு
====அதிக சர்க்கரை
======அதிக சுவை
குறைந்த புரதம்
==குறைந்த வைட்டமீன்
====குறைந்த விலை
======குறைந்த வாழ்வு

எல்லாம் உனக்கு வேண்டுமென்றால்
====நாடிப்போ நீ பாஸ்ட் பூடு...
புதுவிதமான நோய்கள் வேண்டின்
====தேடிப்போ நீ ஜங்க் பூடு... (2) (அவசரம்....)

பாரம்பரிய உணவுகள்
====பரிதாபம் ஆயின...
பாட்டிசெய்த பட்சணங்கள்
====வீட்டைவிட்டே போயின...
நல்ல நல்ல பழக்கங்கள்
====நம்மைவிட்டு மறைந்தன...
நலம் தரும் வழக்கங்கள்
====மண்ணுக்குள்ளே புதைந்தன...

சாதனைகள் படைக்கவந்து
====வேதனைகள் சுமப்பதேன்?
சோதனைகள் கடந்துநின்றால்
====லட்சியங்கள் வெல்லுமே....
====லட்சியங்கள் வெல்லுமே.... (அதிக....)

தேவையில்லா உணவுகள்
====தள்ளி வைப்போமே...
அடம்பிடிக்கும் நாக்கினை
====கட்டி வைப்போமே...
எண்ணங்களில் மாற்றங்கள்
====கொண்டுவந்தால் நல்லது...
வண்ண வண்ண நாட்களும்
====உங்களுக்கு உள்ளது...

சாதனைகள் படைக்கவந்து
====வேதனைகள் சுமப்பதேன்?
சோதனைகள் கடந்துநின்றால்
====லட்சியங்கள் வெல்லுமே....
====லட்சியங்கள் வெல்லுமே.... (அதிக....)
(அவசரம்....)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Sep-15, 8:53 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 3265

மேலே