நானும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உறங்கட்டுமா
![](https://eluthu.com/images/loading.gif)
பசியோடு வந்தாலும்..
நாள் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் மனைவி சற்று கண்ணயர்ந்து விட்டால்...
நீரை ஆகாரமாக்கிக்கொண்டு உறங்கச் செல்லும் கனவனை திடீரென்று உணர்ந்தவளாய்... 'சாப்பிடலாம் வாங்க'
என்று அழைக்கும் போது...
சற்றும் தாமதியாமல்
'நான் சாப்பிட்டு விட்டேன் அம்மா
நீ தூங்கு 'என்று
தலை வருடிக் கொடுக்கும் தலைவனிடம்..
'நானும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உறங்கட்டுமா?' என்று தலைவி கேட்கும் வாழ்க்கை அருமையானதே!!