நல்ல வேளை எங்கே

முல்லா ஒரு கார் வாங்கினார்.வாங்கின நாளிலிருந்து தினமும் ஏதாவது பிரச்சினை.நேரே அக்காரை அவரிடம் விற்றவரிடம் சென்றார்.''அய்யா,அன்று நீங்கள் இந்தக் காரை விற்கும்போது இந்தக் காரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னீர்களோ அதைத் திரும்பச் சொல்லுங்கள்.''என்றார் .அவரும் காரை விற்பதற்காக மிகைப்படுத்திச் சொன்னவற்றை மீண்டும் சொன்னார்.முல்லா சொன்னார்,''அந்தக் கார் வாங்கியதிகிருந்து நொந்து போய் இருந்தேன்.நல்ல வேளை! எங்கே நான் எமாந்துவிட்டேனோ என்று நினைத்தேன்.''

எழுதியவர் : முல்லா கதை (29-Sep-15, 6:45 pm)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 103

மேலே