காலச்சுவடுகள்

நீரு பூத்த நெருப்பு
ஒரு நாள்
எரிமலையாய்....
என் நினைவலைகள்
நித்தம் நித்தம்
சில வரிகளாய்

என் அப்பத்தா
சுட்டுத்தந்த
பணியாரத்தில்
பழகியது
''பாசம்''

ஊரு சனம்
இளைப்பார
ஊருக்கு கிழக்கே
சுமைதாங்கி
கற்றுக்கொடுத்தது
''எதையும் தங்கும் இதயம்''

வயக்காட்டிற்கு
வழிகாட்டும்
ஒத்தையடி பாதை
சொல்லிகொடுத்தது
''சமத்துவம்''

தெருஓர
திண்ணையில்
முழங்கால் தெரிய
சேலை மடக்கி
கால் நீட்டி உக்காந்து
ரவுக்கைஇல்லா
சுகத்தை அனுபவித்து
''மாராப்பு எனக்கு எதுக்குன்னு
கேக்குதடி உன் மார்பு''
என்று கிண்டலடித்து கொண்டு
எங்க ஊரு கிளவிக
அக்காலத்து கிரைண்டரில்
வெத்தலையை
குத்திக்கொண்டு
உளறிய பழமொழியில்
கற்றுக்கொண்டது
'' வாழ்க்கைத்தத்துவம் ''

எழுதியவர் : மா.மு.தமிழ்நேயன் (30-Sep-15, 4:11 pm)
பார்வை : 121

மேலே