அரசியல் நடப்பு
கவிதை போட்டிக்கு போய்
கன்னத்லே கை வச்சிட்டு கவுந்து உக்காந்தா
கவித வரும்னு நெனச்ச கவித வரல
தூக்கம் தா வந்திச்சி
குடுத்த நேரமும் முடிஞ்சி போச்சி
கடைசியா தலைப்ப பாத்த “அரசியல் நடப்பு”
ஒன்னும்மே உதிக்கல மண்டைலே என்ன எழுதே - கடைசியா
“கோ கூ” ன்னு எழுதிட்டு வந்திட்டேன்.
பி.கு: ஐயோ இது கேட்ட வார்த்தை எல்லாம் இல்லைங்க
“கோமாளிகளின் கூடாரம்” அதோட சுருக்கம் தான்…
இப்போ சொல்லுங்க முதல் பரிசு எனக்கு தானே ..?