நான்

நான் ஒரு போராளி
என் போராட்டம் சாதிக்க அல்ல
சரித்திரம் படைக்க!

நான் ஒரு லட்சியவாதி
என் லட்சியம் லட்சங்களோ
கோடிகளோ அல்ல
என் சுய மரியாதைக்காக!

நான் ஒரு தீவிரவாதி
என் தீவிரவாதம்
வெற்றிக்காக அல்ல
உழைப்பிற்காக!

நான் ஒரு உழைப்பாளி
என் வியர்வைத்துளிகள்
சிந்துவதற்காக அல்ல
விதைப்பதற்காக!

முதுமை வந்தெனை ஆட்கொண்டாலும்
உடல் வலுவிழந்து
மெலிந்தாலும்

உயிர் மூச்சுள்ளவரை உழைக்க வேண்டும் என்னும்
என் லட்சியத்திற்காகப்
போராடும் தீவிரவாதி தான்
நான்!

எழுதியவர் : த.கோபால கிருஷ்ணன் (30-Sep-15, 11:52 pm)
Tanglish : naan
பார்வை : 108

மேலே