கொடுத்து வைத்தவன்

காம மோகத்தில் பிரம்மன் உதிர்த்த விதை,
ஓரக்கண் பார்வையில், பரமனையும் பித்தாக்கும் கண்கள்
நிழல் தொடா இராமனும், ஸ்பரிஸிக்க ஏங்கும் ஸ்பரிஸம்
பொறாமையில் விதியும் பொங்கும்:
எவனாள இவள் பிறந்தாள்;
பேசி சிரித்து மகிழ்ந்திட;
மஞ்சத்தில் துகிழுரித்து;
மோகத்தில் மனம் மயக்கி;
காமத்தில் உச்சந்தொட;
கொடுத்து வைத்தவன் எவனோ,
என வெம்பிய நாட்கள் பல
ஆனால் இன்று என் மஞ்சத்தில் என்றைக்கும் என்னவளாய் – அவள்
கொடுத்து வைத்தவன்!!!

எழுதியவர் : சதீஷ் ஆதித்யா (30-Sep-15, 10:36 pm)
சேர்த்தது : ezhuthukol
பார்வை : 116

மேலே