துரை சிங்கம் ஒன்று புறப்பட்டதே

(துரை) சிங்கம் ஒன்று புறப்பட்டதே
இளநிலைய முடிச்சிட்டு
இளஞ்சிங்கம் ஒண்ணு புறப்பட்டு
தமயன் வீட்டத்தேடி வந்துச்சாம்
தனக்கிருந்த பாசமெல்லாம் - தன்
அண்ணன் மேல கொட்டிக்
கொட்டி வாழ்ந்து வந்துச்சாம்
மொட்டமாடி நின்னுகிட்டு
வர்ற போற எல்லாரையும்
கிண்டல் நக்கல் செஞ்சி சிரிச்சிச்சாம்
அண்ணி வயத்தில் வளரும் - அந்த
அடாவடி சுட்டி பாக்க
ஆவலாத் தான் காத்திருந்திச்சாம்
சின்னச் சின்ன தப்பு கூட
அண்ணன் சின்ன மனசு வலிக்குமின்னு
அன்பால் கொஞ்சம் கட்டிப் போட்டிச்சாம்
சுட்டிப் பய பிறந்தவுடன்
கூப்பிட்டு அழைக்கத்தானே
"கிறிஸ்" ன்னு பேரும் வச்சிச்சாம்
அப்ப இருந்து இப்பவரை
அன்பான சித்தப்பான்னு
ஆளமாத்தான் ஆட்சி செய்யுதாம் - அந்த
பிஞ்சி மனசில் கூட
ஆழமாத்தான் ஆட்சி செய்யுதாம்
என் மகனக் கூப்பிடற நேரமெல்லாம்
தன்னையும் நினைக்கனுன்னு தான்
அப்பிடி ஓர் பேர் வச்சுச்சோ?
ராசா, இல்லன்னாலும் நினைச்சிருப்பேன்
ஆயுளெல்லாம் உன்னயத்தான் - எனக்கு
உன்னவிட முக்கியமுண்டோ - இவ்வுலகில்
உன்னவிட முக்கியமுண்டோ
நாளைக்கி உன் பிறந்தநாள
நாடே கொண்டாடப்போது;
நாமட்டுந்தான் தவிச்சிருக்கேன்
நீயில்லாம துடிச்சிருக்கேன்
தொக்கி நிற்கும் இப்பாடல் கூட
முடிக்க மனமில்லாம நானே
விக்கிப் போயி தானே நிற்கிறேன் - உன்
நினைவில் நிழலாய் உன்னருகில்
நானும் நிதமும் வாழ்கிறேன்